Monday, March 17, 2008

இயலாதோர்

வயிற்றையோ மனதையோ,
சோற்றாலோ போதையாலோ
நிறைத்துவிட்டு
வருகிற நிமிடங்களில்
நீள்கிற கைகளுக்கு
இடப்படும்
ஒரு ரூபாய்,
ரத்தமோ,
உதவியோ கேட்டு வருகிற
இமெயில்களை வெறுமனே
இலவசமாய்
பார்வர்டு செய்தல்,
நடந்த
நடக்கிற
விபத்துகளை
எட்டி நின்று
பார்க்கிற வேளைகளில்,
நம் இரக்க சுபாவத்தை
பிறறிய வெளிப்படுத்துகிற
ஒரு "உச்....!"
இவையெல்லாம்
சேர்த்து குழைத்து
எனக்கும் தெரியுமாக்கும்
என்றுநீட்டி முழக்கிக் கொள்ளும்
சில கவிதைகள்,
போன்ற
ஆகப் புனிதமான கடமைகளை
ஆற்றுவதிலேயெ
ஆத்ம திருப்தி
அடைந்துவிடுகிறது,
களத்திலிறங்காமல்,
தள்ளியே நிற்கும்,
நம்
சகமனிதர் குறித்த
நம் சமூக அக்கறை!

7 comments:

Kumar said...

Romba Nalla irukku . Saga manithar kuritha samuga akkaraiyoda , innonayum serthukko .Athu intha mathiri kavitha padichavudane vara kutraunarchi ,net centra vittu veliya pona pinnadiyo , innum oru pathu nimisam kalicho maranthu porathu ......

Enna panrathu .... ? Ivvalo than ippo irukura Saga manithar kuritha samuga akkarai !!

Aanalum romba nalla irukku kavitha...

chandramohan said...

very good,Mohan

பொ.வெண்மணிச் செல்வன் said...

நன்றி சந்திரசேகர்,திகழ்மிளிர்,
தாமத்திற்க்கு மன்னிக்கவும். என் நன்றிகள்!
-வெண்மணி

Kannan.S said...

மீன் குஞ்சுக்கு நீந்த கற்று கொடுக்க வேண்டியது இல்லை..

ரகசிய சிநேகிதி said...

கவிதை அருமை. வாழ்த்துகள்

Aruna said...

கன்னத்தில் அறைந்தது போலிருந்தது...கவிதை.....கைகள் கன்னத்தில் ....என் கன்னம் வலிக்கிறது...
அன்புடன் அருணா

பொ.வெண்மணிச் செல்வன் said...

வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி அருணா!